திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார் ஸ்டாலின்? என்று சீமான் கேள்வி கேட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக அமைச்சர் ஆர் பி உதயகுமார், “வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என பதில் கூறினார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டாலினுக்கு கேள்வி கேட்டுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார் ஸ்டாலின்?. தமிழக அரசியலுக்கு ரஜினி வந்தால் ஏற்க முடியாது. அரசியலுக்கு விஜய வந்தால் நல்லது “நடிகர் விஜய் தமிழன் என்ற அடிப்படையில் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.