Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா படத்திற்கு சீமான் எதிர்ப்பு…. வைரலாகும் பதிவு….!!!

சீமானின் எதிர்ப்பிற்கு பிறகு நடிகை சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடர் வரும் ஜூன் 4-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இத்தொடரின் டிரெய்லர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் இத்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமைதியாக இருங்கள். நம்பிக்கை வைத்து இருங்கள். முழு பாதை தென்பட்டுவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கை முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |