Categories
அரசியல்

தமிழக அரசை வெகுவாக பாராட்டுகிறேன்…. ஆனா இதையும் செய்யுங்கள்…. -சீமான்…!!!

உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம்பரம், சென்னை போன்ற மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், பெண்களுக்கு முழுவதுமாக 11 மாநகராட்சிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசை வரவேற்கிறேன்.

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள உழைக்கக்கூடிய ஆதித்தொல் குடிகள் மற்றும் பல காலமாக சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த உள்ளாட்சியில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு என் பாராட்டுக்கள்.

இதேபோன்று மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் 14,000 துணைத்தலைவர் பொறுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சியின் தலைவர்களையும் மக்களே நேரடி முறையில் தேர்ந்தெடுக்கும் விதத்திலான வாய்ப்பு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |