Categories
அரசியல் தேசிய செய்திகள்

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளி – சீமான் பேட்டி..!!

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளிஎன்றும்  துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் துக்ளக் படித்தால் அறிவாளி என்றால், நீட்தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

குடியுரிமை சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு எதிரானது என விமர்சித்த அவர் அண்டைநாட்டில் இருந்து வருவோரை அகதிகளாக பார்க்க வேண்டுமே தவிர, சட்டவிரோத குடியேறிகள் கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது பண்பாட்டு புரட்சி போராட்டம் போல் உருவாகியுள்ளதாகவும், இது  தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் போற்றியும், குடமுழுக்கும் நடத்தப்படும் வரை இந்த போராட்டம் நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

மாநில உரிமை தன்னாட்சி பற்றிய தற்போதைய ஆட்சியாளர்களுக்குகவலை இல்லை விமர்சித்த அவர், காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் கொள்ளகையில் வித்தியாசம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

 

Categories

Tech |