சீமானிற்கு மரியாதை அளித்ததும் அவரை கோவிலுக்குள் அனுமதித்ததும் தவறு என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்ததாகவும். அதற்கான ஏற்பாடுகளை செய்த கலெக்டர் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். பின்னர் சிவலிங்கத்தையும் சிவபெருமானையும் இழிவாக பேசிய சீமானை பெரிய கோவிலினுள் அனுமதித்தது தவறான செயல் எனவும், அவருக்கு மரியாதை கொடுப்பதும் தவறு எனவும் கூறியுள்ளார்.