Categories
உலக செய்திகள்

கால்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. கடுமையாக்கப்படும் விதிகள்.. அதிகாரிகள் எச்சரிக்கை..!!

இத்தாலிய அரசு யூரோ கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக ரோம் செல்ல முயலும் பிரிட்டன்  மக்களை பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் Stadio Olumpico-வில் யூரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்று வரும் ஜூலை 4-ஆம் தேதியன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணியானது உக்ரைன் அணியை எதிர்கொள்கிறது. எனவே இந்த போட்டியை பார்ப்பதற்கு பிரிட்டன் மக்கள் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இங்கிலாந்து, இத்தாலி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இத்தாலி விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், கால்பந்து ரசிகர்கள் விதிமுறைகளில் இருந்து தப்பிக்க முயல்வதை தடுப்பதற்காக சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் ஒரு பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.

இத்தாலி நாட்டின் சுகாதார அமைச்சக துணைச் செயலாளரான Andrea Costa கூறுகையில், கட்டுப்பாடுகள் சரியாக விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இத்தாலிக்கு செல்ல முடியாது. தற்போது ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் ஜூன் 28-ஆம் தேதிக்கு முன்பே வந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ரோம் நகருக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். கட்டுப்பாடுகளை மீறி ரோம் நகருக்கு செல்ல முயற்சிப்பவர்கள் பிடிபட்டால் அபராதத்துடன் தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |