அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், தலைமையை கைப்பற்றுவதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் கடுமையாக மோதிக் கொள்கின்றனர். அதோடு சசிகலாவும் ஒரு புறம் அதிமுக கட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்று கூறிய ஓபிஎஸ் தற்போது சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கிறார். சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருபுறம் பிரச்சனை இருந்தாலும் டிடிவி தினகரனும் டஃப் கொடுத்து வருகிறார்.
கட்சியில் டிடிவி தினகரனை மட்டும் சேர்க்க கூடாது என்று கூறிய இபிஎஸ் தற்போது டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் 95 சதவீதம் நிர்வாகிகள் இருந்தாலும் தென் மண்டலத்தில் அவருக்கு சரியான ஆதரவு கிடைக்காதது பெரும் சறுக்களாகவே இருக்கிறது.
அதோடு டெல்லியில் இருந்தும் அதிமுகவை ஒன்று படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி சிக்கலில் இருக்கிறார். இதன் காரணமாக தன்னுடைய பக்கம் யாரை இழுத்தால் கட்சி தன்வசப்படும் என்று நினைத்ததில் டிடிவி தினகரன் தான் லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளாராம். அதாவது சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆல் தங்கள் பின்னால் தொண்டர்களை திரட்ட முடியாத போது டிடிவி தினகரன் மற்றும் அமுமுக கட்சியை தொடங்கி தன் பின்னால் ஒரு கூட்டத்தையே கூட்டினார்.
அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் தனக்கான ஆதரவாளர்களை திரட்டியது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தற்போது டிடிவி தினகருடன் எடப்பாடி பழனிச்சாமி திறப்பினர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் ரகசிய ஆலோசனை முடிவடைந்த பிறகு தான் அமமுக மற்றும் அதிமுக இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.