இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ராஜ்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நைம் அதிரடியான தொடக்கத்தை தந்தனர்.
இதன் மூலம் முதல் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 54 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் 29 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரிஷப் பந்திடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த முகமது நைம் 36ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹீம் 4ரன்களில் வெளியேறி வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சௌமியா சர்கார் 30ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹாலிடம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியாக அதிரடியில் களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் முகமதுல்லா 21 பந்துகளில் 30 ரன்களை சேர்த்து சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நைம் 36 ரன்களை சேர்த்தார். இந்திய அணி சார்பில் சஹால் இரண்டு விக்கெட்டுகளையும், வாஷிண்டன் சுந்தர், கலீல் அஹ்மது தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Bangladesh set a target of 154 in the second T20I.#BCB #BANvIND pic.twitter.com/50wpuybGsZ
— Bangladesh Cricket (@BCBtigers) November 7, 2019