Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் செகண்ட் லுக்… இணையத்தில் வெளியீடு….!!!

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ எனும் திரைப்படம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் ரீதியாகவும், கருத்துக்கள் ரீதியாகவும் மாபெரும் பாராட்டுகளைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது. தமிழில் உருவாகி வரும் இப்படத்தில் நாயகனாக ராகுல் ரவீந்திரனும், நாயகியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்து வருகின்றனர்.

மேலும் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷும், ராகுல் ரவீந்திரனும் இருக்கும் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

image

Categories

Tech |