சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட சலூன் கடைக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி-புதூர் பகுதியில் தனிக்கொடி என்பவரது மகன் குமரேசன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்துள்ளார்.
அப்போது அந்த வழியாக காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தாசில்தார் ஆனந்த், சலூன் கடையை பூட்டி “சீல்” வைக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி குமரேசனுடைய சலூன் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் ஊரடங்கு முடியும்வரை கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றும் எச்சரித்துள்ளார்.