Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சார்! அங்க தான் பதுக்கி வச்சிருகாங்க… ஒருவேளை இலங்கைக்கு கடத்துராங்களோ… மொத்தம் 300 கிலோ கடல் அட்டைகள்…!!

300 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை 20 கேன்களில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தடைசெய்யப்பட்ட மஞ்சள், கடல் அட்டைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவற்றை படகுகள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வந்துள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மாவட்ட கடலோர காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு திரேஸ்புரம் பகுதியில் வசித்து வரும் அப்துல் காதர் என்பவருக்கு கடற்கரை அருகில் உள்ள மீன் கம்பெனிக்கு சொந்தமான குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தருவைகுளம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது சுமார் 300 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை 20 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகு கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இவற்றை பதுக்கி வைத்தவர்கள் விவரம் குறித்தும், இலங்கை கடத்துவதற்காக அட்டைகளை பதுக்கி வைத்துள்ளனரா என்றும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |