கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள்,வேறுவழியின்றி கடற்கரையில் நின்றபடியே திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். மீண்டும் கடல் சீற்றம் குறைந்த உடன் படகு சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .