Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “சுப செய்தி வந்து சேரும்”… எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்..!!

நேர்மைக்கு பெயர் போன விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று அவமதித்துப் பேசியவர்கள்  கூட அன்பு பாராட்டக் கூடும். இதனால் மனதில் புத்துணர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சொல்வன்மை இன்று அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை கொடுப்பதாக இருக்கும். ஆகையால் எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று உங்களிடம் உதவி கேட்டு சிலர் வரக்கூடும். அவர்கள் தெரிந்த நபர்களாக இருந்தால் உதவி செய்வது தவறில்லை. தெரியாத நபர்கள் இருந்தால் உதவி செய்யும்போது கவனமாக செய்யுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கிய  காரண காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிற கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்கின்ற காரியங்கள் வெற்றி நடைபோடும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |