பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமரின் முடிவிற்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
பிரிட்டனில் வரும் 19ம் தேதியில் இருந்து கொரோனா விதிமுறைகள் அனைத்தும் அகற்றப்பட உள்ளது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். எனவே மீண்டும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பவுள்ளார்கள். எனினும் மருத்துவ நிபுணர்கள் பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்க்கிறார்கள்.
நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள். அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டால் மீண்டும் கொரோனா முன்பு போல அதிகரித்து விடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.