Categories
கல்வி மாநில செய்திகள்

திட்டமிட்டபடி நாளை (4ஆம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை!

திட்டமிட்டபடி நாளை 4ஆம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் -துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி  நடைபெறும் என்பதால்  வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாலும், ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரையிலும் நடைபெற வாய்ப்புள்ளதாலும் பள்ளிகள் திறப்பதில் சிரமம் ஏற்படும் என ஆசிரியர் சங்கங்கள் இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளித்தது.
அதன்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் வரும் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளை (ஜனவரி 04) திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் நள்ளிரவு வரையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்புள்ளதாக கடிதம் அளித்த நிலையில் தற்போது நேற்று (2ஆம் தேதி) தொடங்கி இன்று வரை வாக்கு பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |