பிரிட்டனில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நடை முறைப்படுத்த உள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்த ஒரு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் முதலில் ஒரு வெகுஜன கொரோனா பரிசோதனை செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மேல்நிலைக்கல்வி மாணவர்களுக்கு மட்டும் சோதனை செய்ய வேண்டும் என்றாலே இரண்டு வாரங்கள் செலவாகும் என கல்வி அமைப்புகள் கருத்து தெரிவித்தனர். ஆகையால் மாணவர்களுக்கு சோதனை கிட்களை அவர்களது வீட்டில்கே கொடுத்து பரிசோதனை செய்து வர பள்ளி மற்றும் கல்லூரி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வாரத்திற்கு இரண்டு முறை வீட்டிலேயே கொரோனா பரிசோதனையை செய்ய கூறியுள்ளனர்.
ஆகையால் இதனை அனைத்தும் கருத்தில் கொண்டு விதி முறையின் அடிப்படையில், மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் நேரங்களைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் புதிய பள்ளி பாதுகாப்பு திட்டம் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.