Categories
அரசியல் மாநில செய்திகள்

பள்ளிகளில் LKG, UKG கிடையாது…. அரும்பு, மொட்டு, மலர் 3 வகுப்புகள் இருக்கும் – சீமான் அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட உள்ளது. இதில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து திருவொற்றியூர் பகுதியில் சீமான் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மக்களுடன் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், “தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி முறையில் மாற்றப்படும். பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி இருக்காது. அதற்கு பதிலாக அரும்பு, மொட்டு, மலர் என்ற மூன்று வகுப்புகள் இருக்கும். 6 வயதிலிருந்து முதலாம் வகுப்பு தொடங்கும். ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடத்தில் மட்டுமே கல்வி தரப்படும். படிப்பு வராதவர்கள் பிடித்த செயல்களுக்கு ஏற்ப அரசு வேலை உண்டு என்று உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |