Categories
சற்றுமுன்

தமிழகத்தில் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு கிடையாது – புதிய அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலோடு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் திரையரங்கில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளும் இயங்கலாம் என தெரிவித்தது.

மேலும் 16ஆம் தேதி முதல் கல்லூரி செயல்படும் என்று கூறியதோடு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்று & பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை பள்ளி திறப்பு காண முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பள்ளி, கல்லூரி திறந்தால் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாக டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரியை திறக்க வேண்டாம் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Categories

Tech |