Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை!!

கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தகவல் அளித்துள்ளார்.

முன்னதாக கர்நாடக மாநிலத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது.

அதன் அடிப்படையில் கர்நாடகாவில் பள்ளிகள் ஜூலையில் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஜூலை 1-ம் தேதியில் இருந்து நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 1 முதல் 3-ம் வகுப்பு மற்றும் 8 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி முதல் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |