10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள்களை சேகரிக்கும் பணிக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் படித்து வருகின்றனர். 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இருந்த பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் அவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் சேகரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள், அவர்களது பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைக்க தடை விதித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. விடைத்தாள்கள் சேகரிக்கும் மற்றும் ஒப்படைக்கும் பணிகளுக்கு மாணவர்கள், அவர்களது பெற்றோர்களை பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.