Categories
உலக செய்திகள்

“என்ன ஒரு அரிய வாய்ப்பு!”.. யூரோ 2020 இறுதி போட்டிக்கு மறுநாள் தாமதமாக வரலாம்.. பள்ளிகள் அறிவிப்பு..!!

யூரோ 2020 இறுதிப்போட்டியை பார்த்துவிட்டு, மறுநாள் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் தாமதமாக வரலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, இத்தாலியை எதிர்கொள்ளும் யூரோ 2020 இறுதிப் போட்டி, ஞாயிற்று கிழமை அன்று நடக்கிறது. இதனை பலரும் ஆர்வமுடன் பார்ப்பார்கள். எனவே திங்கட்கிழமை அன்று சில பள்ளிகளும், வணிக நிறுவனங்களும் தங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தாமதமாக வர அனுமதித்திருக்கிறது.

அதாவது சுமார் 55 வருடங்களுக்கு பின்பு, தற்போது தான் இங்கிலாந்து அணி முதல் தடவையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. எனவே போட்டியை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சுமார் 8 மணியளவில் போட்டி தொடங்குகிறது. சுமார் 11 மணிக்கு ஆட்டம் முடிவடையும். இதில், இங்கிலாந்து அணி கோப்பையை வென்றால்,  கொண்டாட்டம் மிக பெரிய அளவில் இருக்கும் என்பது தெரிந்த விஷயம்.

இதனால் தான் பிரிட்டனில் சில பள்ளிகளும், அலுவலகங்களும் அடுத்தநாள் தாமதமாக வரலாம் என்ற வாய்ப்பை வழங்கியுள்ளது.

Categories

Tech |