Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவித்த முட்டைக்குள் கோழிக்குஞ்சு…. மதிய உணவில் முறைகேடு…. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்….!!

அவித்த முட்டையில் இருந்து இறந்த கோழிக்குஞ்சு வெளி வந்ததை கண்ட மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் கூடிய அவித்த முட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது. அங்கன்வாடி குழந்தைகளுக்கும் இதே போல் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒருமுறை அறந்தாங்கியில் முட்டையைக் கொண்டு வந்து ஒப்படைப்பார். அந்த முட்டை மதிய உணவு திட்ட சத்துணவு மையங்களுக்கு அரந்தாங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

அங்கிருந்து ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு வருகிறது. இந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் முட்டை வழங்கியபோது அவித்த முட்டையின் ஓட்டை உடைத்த போது இறந்த கோழிக்குஞ்சு இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல அவித்த முட்டைகளை உடைக்கும் போது அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கும் சத்துணவு மைய பணியாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில் மாணவர்களுக்கு தேக்கம் அடைந்த மற்றும் காலாவதியான முட்டைகளை ஒப்பந்தக்காரர்கள் வழங்கியுள்ளனர். இதனால் ஒப்பந்தகாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அறந்தாங்கியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட்ட முட்டைகளை சோதனை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |