கருப்பு உருவம் போல் பேய் ஒன்று இருப்பதாக கூறிய பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள சுவற்றில் கருப்பாக பேய் போன்ற உருவம் நிற்பதாக அபிநயா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் பேய் என்று ஒன்றும் இல்லை அதை நினைத்து நீ பயப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு வேலைக்கு சென்று உள்ளனர். இதனை அடுத்து அந்த மாணவியின் தோழி மற்றும் அபிநயாவின் தங்கை மோனிஷா வீட்டிற்கு சென்றபோது, வீடு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் பலமுறை கதவை தட்டி உள்ளனர்.
ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் வழியாக அவரது தோழியும் அவரது தங்கை மோனிஷாவின் பார்த்துள்ளனர். அப்போது அபிநயா அவரது வீட்டில் உள்ள கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சிறுமிகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பரமத்தி வேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.