காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திவ்யா. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் ராகுல்காந்தி தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாணவி திவ்யா சிறப்பு வகுப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வெகுநேரம் ஆகி உள்ளது. இதனால் திவ்யாவின் தாய் பரிமளா அக்கம்பக்கத்தில் விசாரிக்க சென்றுள்ளார். இதனிடையே மாணவியை காதலிப்பதாக கூறிய ராகுல் காந்தி தனது நண்பன் ஜீவா வீட்டில் வைத்து திவ்யாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் மனமுடைந்து போன திவ்யா வீட்டிற்கு சென்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக திவ்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பத்து நாட்கள் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாற்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவான ராகுல் காந்தி மற்றும் அவரது நண்பர் ஜீவா ஆகியோரை தேடி வருகின்றனர்.