கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகு தற்போது தமிழக அரசு காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு மூலமாக ஆட்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்த வகையில் அரசு துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10,000 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்செர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை என எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 8173 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 2,229 இடங்களும் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதை விரைந்து நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.