Categories
மாநில செய்திகள்

SC/ST இளைஞர்களுக்கு இன்று(ஜூலை 16)…. மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று  அதாவது ஜூலை 16ஆம் தேதி எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முகாமில் கலந்து கொள்கின்றன. இதில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இதில் விருப்பமும் தகுதியும் பெற்ற இளைஞர்கள் அசல் கல்வி சான்றுகள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |