Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பியின் உருவச் சிலை அமைக்க வேண்டும்…. இசையமைப்பாளர் வேண்டுகோள்….!!!

மறைந்த எஸ்பிபியின் உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தனது பயணத்தை பாடகராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக, நடிகராக கடந்துவந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று முன் தினம் இவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டு பாடகர்கள் பலரும் அவரது ரசிகர்களும் சமூகவலைத்தள பக்கத்தில் மூலமாக வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் தீனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எஸ்பிபி அவர்களின் 75வது பிறந்த நாளை இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தி வணங்குகிறோம். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு இசை கலைஞர்கள் சங்கம் தலைவர் தீனாவின் வேண்டுகோள் எஸ்பிபி அண்ணாரின் உருவச்சிலையை சென்னை மாநகரில் நிறுவ வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் தினாவின் பதிவு

Categories

Tech |