நடிகர் சிவகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் கொடுத்த அவருடைய உடல் ஆகஸ்ட் 14ஆம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பி பூரண நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகுமார் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது” பாலு, என்னைவிட நீங்கள் நாலு வயசு சிறியவர். அதனால் நான் உங்களை தம்பி என்றே கூப்பிடலாம். உலகமே கொண்டாடக்கூடிய ஒப்பற்ற பாடகர் நீங்கள். நூறுக்கும் மேலான படங்களில் எனக்காக பாடி இருக்கிறீர்கள். முதல் முதலில் நீங்கள் எனக்கு எந்த படத்தில் டூயட் பாடினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா?
“மூன்று தெய்வங்கள்” படத்தில் ‘முள்ளில்லா ரோஜா’ பாடல் தான். நீங்கள் எனக்காக பாடிய முதல் பாட்டு. அதன் பிறகு டங் ட்விஸ்ட்டர் மாதிரி ஒரு பாட்டு கொடுத்து, கண்காட்சியில் பாடச் சொன்னார்கள். அதில் நீங்கள் அருமையாக பாடி இருப்பீர்கள். அதற்குப்பின் ‘என் கண்மணி’ என்ற பாடல் உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் இப்பவும் மறக்க முடியாது. எனது 100 படத்தில், ‘மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்[ என்று பாடினீர்கள். அதேபோல ‘உச்சி வெறுத்திருச்சி பிச்சிப்பூ பச்சைக்கிளி’, என்ற பாடலுக்கு 45 நாட்கள் காடுகளிலும், மலைகளிலும், உதடுகளில் எல்லாம் ரத்தம் வர வைத்து நடித்தேன். வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்தவர் நீங்கள். கொரோனவும் ஒரு சவால்தான் சீக்கிரமாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வா பாலு” என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.