Categories
தேசிய செய்திகள்

SBI ATM-இல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணம்….? வெளியான பகீர் தகவல்…!!!!!

நம்மில் பலரும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எங்கு சென்றாலும் ATM இல் பணத்தை எடுத்துக் கொள்கிறோம். இந்நிலையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 4 மேல் பணம் எடுத்தால் 173 ரூபாய் செலுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. எஸ்பிஐ வங்கியின் ATM மையத்தில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ஒருவர் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது வரி 150, சேவைக்கட்டணம் 23 என மொத்தம் 173 வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த செய்தி போலியானது. இதுபோன்ற தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் ஏடிஎம் சம்பந்தமாக அப்படி எந்த விதியும் இல்லை PIB Fact Check தெரிவித்துள்ளது.  ஒருவர் ATM-இல் 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்தால் ரூ.21 வசூலிக்கப்படும் தெரிவித்துள்ளது

Categories

Tech |