நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருதி அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறது. அவ்வகையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவு இல்லாமல் ஆன்லைன் மூலமாக எளிதில் வீட்டுக் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
அதாவது எஸ்பிஐ யோனோ செயலி மூலமாக எந்த நேரத்திலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எளிதில் கடன் பெற முடியும். எஸ் பி ஐ யோனோ செயலில் லாகின் செய்து Best offers ல் நுழைந்து SBI Realty ஆப்ஷனை கிளிக் செய்து வீட்டுக்கடனை Apply செய்து பெற்றுக் கொள்ளலாம்