இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகின்றது. அவ்வகையில் எஸ்பிஐ வங்கி ஓய்வூதியத்தாளர்களுக்கு வீடியோ மூலமாக வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய வீடுகளில் இருந்து காணொளி மூலமாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி இலவசமாகவும் காகிதம் அற்றதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை SBI pension Seva மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலமாக குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பெற முடியும். குறிப்பாக இந்த சேவை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில வரைமுறைகள் உள்ளன. அதன்படி பயனர்கள் இந்தியாவிற்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே தங்களின் ஆதார் அட்டைகளை ஓய்வூதிய கணக்குகளுடன் இணைத்து இருக்க வேண்டும். இந்த ஆண்டிற்கான வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படும். இந்த வசதியை பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.