Categories
தேசிய செய்திகள்

SBI-இல் FD கணக்கு இருக்கா….? உங்களுக்கு இதோ குட் நியூஸ்….!!!!

பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை அதிகரியுள்ளதாக SBI வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக அறிவித்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி இந்த புதிய முடிவை கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் சில தனியார் வங்கிகள் நிலையான வைப்புத் தொகை எனும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை அதிகரித்திருந்தன.

இதனைதொடர்ந்து தற்போது எஸ்பிஐ வங்கியும் பிக்சட் டெபாசிட் வட்டியை அதிகரித்துள்ளது. இதுகுறித்து பேசிய எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா “புதிய பிக்சட் டெபாசிட் திட்டங்களை பொறுத்த வரையில், அவை புதிய வட்டி விகிதங்களின்படி இருக்கும். சில முதிர்வுகளுக்கு ஏற்கனவே வட்டி விதிதம் அதிகரிப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான எஃப்.டி திட்டங்களுக்கு தற்போது 5.10 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். 3 முதல் 5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கு புதிய எஃப்டிகளைத் திறந்தால், எஃப்டி மீதான வட்டி விகிதம் 5.45 சதவீதமாக இருக்கும்.

Categories

Tech |