விமலை வைத்து படம் தயாரிப்பது என்றால் என்னிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்
களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த விமல் அவர்களை வைத்து எந்த படம் தயாரிப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசித்த பின்னரே தயாரிக்கவும் என தயாரிப்பாளர் கோபி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல் அவர்கள் தன்னிடம் 5.35 கோடி ரூபாய் கடன் வாங்கினார். படம் வெளிவந்த பின்னர் 1.35 கோடி மட்டுமே திருப்பி கொடுத்தார். மீதி பணத்தை படங்களில் நடித்த பின் தருவதாகக் கூறினார்.
ஆனால் எத்தனையோ படங்களில் நடித்தும் இன்றுவரை எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி தராத காரணத்தினால் எனது அனுமதி இல்லாமல் அவரது படம் வெளியிட முடியாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே விமலை வைத்து படம் தயாரிப்பவர்களும் தயாரிக்கும் எண்ணம் கொண்டவர்களும் என்னிடம் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். உங்கள் நலனுக்காகவே இந்த கடிதம் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை எனக் கூறியிருந்தார்.