Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஆடு”ன்னு சொல்லுங்க..! எனக்கு அது பெருமை தான்… அண்ணாமலை செம பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இத்தனை பேர் அரசியல்ல இருக்காங்க. யாரோ ஒருவன் எந்த கட்சியாவது,  முதல் தலைமுறை பட்டதாரி எத்தனை பேர் தி.மு.க.வுக்கு வந்திருக்காங்க.எத்தனை பேர் வந்திருக்காங்க அரசியல்வாதிகளா? நீங்க இவ்ளோ சமூக நீதி பேசுறீங்க. அதுல யாராவது தலை எடுத்து வந்தா, தகாத வார்த்தையில் பேசுவீங்க. ஆபாசம் காட்டுவீங்க. திட்டுவீங்க, ஐடி விங் வச்சு பேசுவீங்க, இதை எல்லாம் கேட்டுக்கிட்டு நான் ஜீசஸ் ரைஸ் கிடையாது. ஒரு கன்னத்துல அடிச்சா, இன்னொரு கன்னத்தை காட்டிட்டு போறதுக்கு  இயேசு நான் கிடையாது.

அடிச்சிங்கனா, திருப்பி அடிப்பேன் .கோபமாக இருந்தா டபுள் கோபத்தோடு வருவேன். இதனால நான் எதை இழந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன். ஏன்னா எனக்கு என்னுடைய விவசாயம், மாடு, தோட்டம் இருக்கு. இத நா தெளிவா சொல்லுறேன். மரியாதையா அரசியல் திமுக செஞ்சா,  மரியாதையை இரட்டிப்பாக நான் கொடுப்பேன். தனிப்பட்ட முறையிலே விமர்சனமோ, தரம் தாழ்ந்து போனாங்கன்னா பி.டி. ஆர்ருக்கு பதிலடி கொடுத்தது என்னை பொருத்தவரை எந்த விதத்திலும் தவறு கிடையாது.

அடைமொழி வச்சு கூப்பிடுங்க எந்த கவலையும் இல்லை. நான் ஆட்டை வைத்து பிழைப்பு நடத்துகிறேன்.”ஆடு”ன்னு சொல்லுங்க, என்னையும் தி.மு.க. வில்  ஒரு இடத்தில் உட்கார வைக்க தான் போறீங்க, அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இதை வைத்து நீ  பெரிய ஆள் , பரம்பரை,  நான் மிராசுதாரர்,  நான்  ஏகாதிபத்தியத்திலேயே பெரிய ஆளா இருந்தேன் அப்படின்னு நீங்க காட்டுனீங்கனா. என்னுடைய பாரம்பரியத்தில், என்னுடைய விவசாயத்துல, என்னுடைய கிராமத்துல, எனக்கு அது பெருமை தான் என தெரிவித்தார்.

Categories

Tech |