Categories
தேசிய செய்திகள்

சாவ்லா கூட்டு பாலியல் வன்கொடுமை…. 3 குற்றவாளிகள் விடுதலை… உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2012 ஆம் ஆண்டு மாதம் பணிபுரிந்த டெல்லி குர்கான் சைபர் சிட்டி பகுதியில் இருந்து வீடு திரும்பிய போது காணாமல் போனார். அதன் பிறகு பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கு பிறகு ஹரியானாவின் ரெவாரியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அந்த இளம் பெண்ணின் சிதைந்த உடலை கண்டெடுத்தனர். அந்த இளம் பெண் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது 3 நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ‌தெரிய வந்தது. அதனைப் போல காரில் இருக்கும் உபகரணங்கள், கண்ணாடி பாட்டில் மற்றும் இரும்பு ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் மூலம் தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதனை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் அவர்கள் மூவரையும் விடுவித்து உச்சநீதிமன்ற நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் நீதிபதியின் தீர்ப்பில் கூறியது, வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அடையாளம், குற்றத்தை நிரூபிக்கவும் கூடிய வகையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட காரின் அடையாளம், குற்றவாளிகளிடம் இருந்து சேகரித்த மாதிரிகள், மருத்துவம் மற்றும் அறிவியல் பூர்வ ஆதாரங்கள், மரபணு பரிசோதனை அறிக்கை, கைபேசி அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை உறுதிப்படுத்தவும், குற்றவாளிக்கு எதிராக தெளிவான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் விசாரணை தரப்பு தவறிவிட்டது.

மேலும் குற்றவாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் மாற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளதை என்பதையும் புறம் தள்ளிட முடியாது. அதன்படி குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் வகையில் நிரூபிக்க விசாரணை தரப்பு தவறிவிட்டது. இதனால் மிக கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருந்த போதும் அவர்களை விடுவிப்பதை தவிர வேறு மாற்று வாய்ப்பு நீதிமன்றத்துக்கு இல்லை. அதுமட்டுமில்லாமல் விசாரணை நீதிமன்றத்தால் உண்மை வெளி கொண்டுவரபடவில்லை என்பது உறுதியாகிறது. எனவே சந்தேகத்தின் பலனாக குற்றவாளிகள் அவர்கள் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. அவ்வாறு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு பெறும் உரிமை அளிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |