Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSurjith : ”இதே போல ஆட மீண்டு வா ” …. வைரலாகும் வீடியோ ….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 29 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது.நேற்று காலை ஏழு மணியளவில் குழி தோண்டும் பணி தொடங்கியது.

Image result for சுர்ஜித்

 

இதில் பயன்படுத்தப்பட்ட முதல் ரிக் இயந்திரம் 35அடிக்கு குழி தோண்டியிருந்தது. பின்பு, பிற்பகல் 12 மணியளவில் கொண்டுவரப்பட்ட அதிதிறன் கொண்ட ‘ராக் பிரேக்கர்’ என்னும் இரண்டாவது ரிக் இயந்திரம் ஏழு மணிநேரத்தில் ஐந்தடிக்கு மட்டுமே குழி தோண்டியுள்ளது.இரவு பகலாக மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும் கடுமையான பாறைகள் தென்படுவதால் குழி தோண்டும் பணி தாமதமடைந்தது.

 

மேலும் இரண்டு ரிக் இயந்திரத்தாலும் பாறைகளை உடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் போர்வெல் மூலம் 4 துளைகள் போடும் பணி நடைபெற்று வருகின்றது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் சுர்ஜித் எப்படியாவது மீண்டு வந்து விடுவான் என்கின்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் சுர்ஜித் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதலாத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |