Categories
தேசிய செய்திகள்

தந்தையின் உயிரை காப்பாற்ற… ஆக்சிஜன் கேட்ட பெண்ணை… உல்லாசத்துக்கு அழைத்த கொடூரன்…!!

டெல்லியில் ஆபத்தாக இருக்கும் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற ஆக்ஸிஜன் வேண்டி உதவி கேட்ட பெண்ணை தன்னுடன் வந்து உல்லாசமாக இருந்தால் ஆக்சிஜன் தருவதாக ஒரு இளைஞன் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல மாநிலங்களிலும் அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி ஆகியவை பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் பவ்ரீன் காந்தாரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் தோழியின் தந்தை தொற்று காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை எனவே யாராவது ஆக்சிஜன் கொடுத்து உதவும்படி அந்தப் பெண் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நபரொருவர் ஆக்சிஜன் சிலிண்டரை நான் ஏற்பாடு செய்து தருகிறேன். அதற்கு பதில் உன் தோழியை என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல் என்று பதிலளித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் இதுபோன்ற கொடூர நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பலரும் பார்த்தனர். இதையடுத்து அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்கும்படி அனைவரும் கேட்டுக்கொண்டனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் தற்போது நடந்து வருவதாகவும், அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |