விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வார நாமினேஷனில் கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் யாரோ ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நன்றாக விளையாடி வந்த தனலட்சுமி எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவருக்கு ஆதரவாக ‘சேவ் தனா’ என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. இந்நிலையில், ரசிகர்கள் பிக்பாஸ் நேர்மையற்ற முறையில் நடந்ததாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.