அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ளது.
சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அராம்கோ எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறி உள்ளது.
இதனைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சவுதி அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.