Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய லாரி… அதிர்ஷ்டவசமாக தப்பிய டாக்டர்… அரியலூரில் பரபரப்பு…!!

டிப்பர் லாரி, காரின் மீது மோதிய விபத்தில் பெண் மருத்துவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி புதூர் பகுதியில் வினா பிரியங்கா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது பணிக்காக கும்பகோணம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா கும்பகோணத்திலிருந்து பணிக்காக தனது காரில் பாலம் வழியாக காரைக்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பிரியங்கா காரின் மீது அவ்வழியாக வேகமாக சென்ற டிப்பர் லாரி மோதி விட்டது. ஆனால் இந்த விபத்திலிருந்து பிரியங்கா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இருப்பினும் காரின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்து விட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபோன்ற விபத்துகள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படுவதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Categories

Tech |