சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் சட்டவிரோதமாக வெளிமாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துவதாக காவல்துறையினற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற ரயிலை நிறுத்திய காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் முருகன் 22 ரேஷன் மூட்டைகள் ரயிலில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.