சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டாஸ்மாக் மண்டல அதிகாரி கூறியுள்ளார்.
வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் கோவை டாஸ்மாக் மண்டல அதிகாரி மகாராஜ் அவர்களின் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வால்பாறை, கருமலை, சிறுகுன்றா, குரங்குமுடி, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, இஞ்சிப்பாறை போன்ற இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.