சட்ட விரோதமாக ரேஷன் அரிசிகளை கடத்தி வந்த 2 வாலிபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினரின் அதிரடி குழு மற்றும் பறக்கும் படை காவல்துறையினர் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் பைபாஸ் சாலை உள்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது சம்பந்தமாக அக்நல், தமிழரசன் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளது.