இட்லி, தோசைக்கு 5 நிமிடத்தில் ரெடி ஆகும் சட்னி, தொட்டு சாப்பிட்டால் ருசி அதிகம்..
தேவையான பொருட்கள்:
பூண்டு – 50 கிராம்
வத்தல் – 5
சின்ன வெங்காயம் – 15
தேங்காய் (துருவியது) – ஒரு கப்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
புளி – ஒரு சின்ன துண்டு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்ததும் அதில் உரித்து வைத்திருக்கும் பூண்டை போடா வேண்டும். அது நன்கு பொன்னிறமாக வந்ததும் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.
பின்னர் வத்தல், புளி, துருவிய தேங்காய் இவைகளை போட்டு நன்றாக வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின்னர், அதை ஆரவச்சி மிக்ஸரில் போட்டு மையாக அரைத்து கொள்ளுங்கள்.
அதே பாத்திரத்தில் நல்ல எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும், கடுகு உளுந்தைப்பருப்பு போட்டு பொரிந்ததும், கறிவேப்பிலை தேவையான அளவிற்கு போட்டு நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை கொட்டி, தேவையான அளவு உப்பு போட்டு இறக்க வேண்டும்.