தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் திரு. பால கிருஷ்ணன், திரு. ரகு கணேஷ் ஆகியோர் தங்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்ததாக வந்த புகாரை அடுத்து கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வம் புகார் அளித்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவரும் பணம் பெற்றுக் கொண்டு, பல்வேறு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும், என வழக்கறிஞர் திரு. ஜெயச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Categories
சாத்தான்குளம் காவலர்கள் பொய் வழக்கு பதிவு செய்ததாக புகார்…!!
