சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார்.
சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலர் வெயில்முத்து மதுரை முதலாம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்குகள் மதுரை முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இருவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.