சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கரப்பட்டியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பழனிச்சாமி, ஜக்குப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.