புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு. PR.மனோகரனுக்கு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக திரு. PR.மனோகரனை கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நியமனம் செய்தார். இதனைத்தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர் திரு. மனோகரனுக்கு தூத்துக்குடியில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் தலைமையில் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. PR.மனோகரன் 2021 -ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.