சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே எனும் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது. மேலும் நடிகர் சசிகுமார் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
இதில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆகையால் எம்ஜிஆர் மகன் திரைப்பட தயாரிப்பாளர் இப்படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்து விட்டார் என்று தெரியவந்துள்ளது. இதனைப் போலவே சசிகுமாரின் மற்ற பட தயாரிப்பாளர்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்வார்களா அல்லது தியேட்டர்களில் வெளியிட சரியான காலம் வரும் வரை காத்திருப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.