‘காரி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இதனையடுத்து தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் ”காரி”.
The next from @SasikumarDir! 🔥#Kaari coming 🔜
@HemanthM_Dir @immancomposer@Prince_Pictures @parv_1998 pic.twitter.com/X4pzhnq1zC— Sony Music South (@SonyMusicSouth) March 28, 2022
ஹேமந்த் இயக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.